கேரளாவில் கருவுற்ற அண்ணாச்சி பழத்தில் வெடிகுண்டு வைத்து யானை கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கருவுற்ற யானைக்கு கொடுத்து உயிரிழந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்ட குரல் எழுந்ததோடு, ஆதரவுகளும் பெருகின. இது மனித நேயமற்ற செயல் என்று அனைவரும் யானைக்கு ஆதரவாகவும், சம்மந்தப்பட்ட கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொல்லி வந்தனர். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு சார்பிலும் இது சம்பந்தமான அறிக்கையை கேட்டிருந்தார்கள். விளையாட்டு பிரபலங்களும், திரைத் துறையை சார்ந்தவர்களும், பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு மனிதன் விலங்கு இதில் யார் மிருகம் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பட்டாசு வெடித்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.