திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 1,124 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645 பேர் கொரோனோவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,176 ஆக அதிகரித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.