திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 11-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று வெளியூர் பக்தர்கள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் தேதியிலிருந்து காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விஐபி தரிசனத்துக்கு அனுமதி என்று தெரிவித்துள்ளது தேவஸ்தானம். தினமும் 3 ஆயிரம் டிக்கெட் வழங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முன் பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் டிக்கெட் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் என்ன ?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில், பக்தர்களுக்கு கொரோனா இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஸ்ரீவாரி மெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்டியலை தொடாமல் பக்தர்கள் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்த வேண்டும். காலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை வழிபடலாம். பக்தர்கள் மாஸ்க் அணிந்து வருவதுடன் கிருமினாசினியும் எடுத்து வரவேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.