Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை – அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு …!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து, அதில் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு ஊர்களுக்கு அனுப்பி விட்டார்கள் என்று அவர் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் 163 கோடி ரூபாய் அளவிற்கு நாங்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் செலவு செய்திருக்கிறோம் என்பதை.  அதே போல பீகார், உத்தரபிரதேசம், டெல்லி என அனைவரும் என்ன உதவி செய்தார்களோ அதை சொல்லி வருகிறார்கள்.

Covid-19: Supreme Court Seeks Report From Government On Steps To ...

புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? என்பதை அறிந்து கொள்ள உச்சநீதிமன்றம் விரும்புகின்றது.புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்தில் திரும்பிய நிலையில் அவர்களுக்கு மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்து தரவேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

Categories

Tech |