சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,60,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் மையங்கள் என மொத்தம் 74 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா குறித்த செய்திக்குறிப்பு வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளதாகவும், தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.