Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…முயற்சிகள் கைகூடும்…லாபம் அதிகரிக்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!       பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மட்டும் கவனமுடன் இருப்பது முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள்.

திருமண முயற்சிகள் கைகூடும் நேரம் கிடைக்கும். ஓய்வு அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொண்டது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருப்பதால் சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும்.

ஆனால் கண்டிப்பாக புதிதாக கடன்கள் மட்டும் ஏதும் வாங்க வேண்டாம்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |