மீன ராசி அன்பர்களே…! இன்று கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும். கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல லாபம் கிடைத்து உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். புதிய வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது யோகமான நாளாக அமையும்.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பலவிதத்திலும் உதவிகளை செய்வார்கள். உறவினர்களின் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அவர்கள் மூலம் செலவுகளும் இருக்கும். அனுபவபூர்வமான அறிவுத்திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். இன்று அனைவரையும் காரியங்கள் தடபுடலாக கைகூடும். சில இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். திருமணத்திற்காக காத்திருக்கும் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். காதலர்களுக்கு இனிமை காணும் நாளாகவும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.