காஞ்சிபுர மாவட்டத்தில் பறக்கும் படையின் தீவீர சோதனையில் 5,23,000 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்பொழுது விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது .
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன
இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றன , வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது .ஆகவே ,அனைத்து கட்சியினரும் வேகமாக வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு பிரச்சார பயணத்தில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்று விடக்கூடாது என தேர்தல் ஆணையம் பறக்கும் படையை நிறுவியுள்ளது
இந்த பறக்கும் படையானது தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது சமீபகாலமாக பறக்கும் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக பணம் வைத்திருக்கும் நபர்களை விசாரித்து அதனை கைப்பற்றி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது அந்த பக்கமாக வந்த வாகனங்களை சோதனை செய்யும் பொழுது ஒரு வாகனத்தில் எந்தவித முறையான ஆவணங்கள் இன்றி 5 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் சோதனையில் கண்டெடுக்கப்பட்டது
இதனை அடுத்து வாகனத்தில் வந்தவர்கள் மாட்டு வியாபாரிகள் எனவும் அவர்கள் மாடு வாங்க பணத்தை எடுத்து கொண்டு சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளனர் இதனை ஏற்காத காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .விசாரணைக்கு பின் முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்..