அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேரைக் கொன்று குவித்துள்ளது.
இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,09,042 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, 7 லட்சத்து 38 ஆயிரத்து 646 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்துள்ள தகவலின்படி, அமேரிக்காவில் உயிரிழப்புகள் 1,09,042 ஆகும்.
ஆனால் மொத்த உயிரிழப்புகள் 111,390 ஆக அதிகரித்துள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், உலகளவில் 6,850,236 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மட்டும் 3.98 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,351,229 ஆக அதிகரித்துள்ளது.