Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு மையங்கள் அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லாமல் அவர்களுக்காக இந்த சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகமான இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டன. இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, எக்காரணம் கொண்டும் கொரோனா பாதித்த பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மற்ற மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு செல்லும் அனுமதி கிடையாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, மாணவர்களுக்கான பேருந்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசியர்களுக்காக வருகிற 8ம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மாணவர்களுக்காக 41 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை போன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலும் சுமார் 5 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |