கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கு கட்டணம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களில் வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான சில பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் இருந்து பெற வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிக்கையை அரசிடம் கொடுத்ததன் அடிப்படையில் தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்ற கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பின் போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் சாதாரண அறிகுறியுடன் ( லேசான அறிகுறி ) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 7,500 ரூபாய் வரை வசூல் செய்யலாம் என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.