புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்திராகாந்தி மருத்துவமனையில் ஒரு தளம் மட்டும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 42 பேராக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் மூலமாகவும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் எல்லையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.