Categories
அரசியல்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்!!

ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது.

இந்த சமயத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மற்றும் சலூன் கடைகள், கட்டுமான பணிகள், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை செயலில் உள்ளது. இருப்பினும், போக்குவரத்து முடக்கம் இன்னும் அமலில் உள்ளது. இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுபவர்கள், கால் டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |