Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு 1,000த்தை கடந்துள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் எப்போது இல்லாத அளவு இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 0.832% ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |