தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 663 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,423 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 874 பேர் ஆண்கள், 584 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 18,689 ஆண்களும், 11,446 பெண்களும், 16 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் மையங்கள் என மொத்தம் 74 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மட்டும் 16,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,76,695 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.12 வயதுக்குட்பட்ட 1,638 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 25,385 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,129 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.