மேஷ ராசி அன்பர்களே …! இன்று முக்கிய பணி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி தான் நிறைவேற்ற வேண்டியிருக்கும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். பணவரவு இன்று நல்லபடியாக தான் வந்து சேரும்.
எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெறுவார்கள். உயர்பதவிகளும் கிடைக்கும். இன்று நான் முன்னேற்றமான நாளாகவே இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.வெள்ளை உங்களுக்கு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது மிக சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.