கடக ராசி அன்பர்களே …! இன்று சிலர் உங்களிடம் பரிதாபத்துடன் பேசுவார்கள். விலகியே சுயகௌரவம் பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்காக பல செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரலாமா என்று சிந்தனை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். தடைபட்ட காரியங்கள் சாதகமாகவே முடியும். பணம் வரவு சீராகவே இருக்கும். காவலர்களுக்கும் இன்று பொன்னான நாளாகவே இருக்கும். புதிதாக இன்று கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.
இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.