துலாம் ராசி அன்பர்களே …! இன்று சாந்த குணம் உண்டாகும். பேச்சில் செயலில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான திட்டங்களை தீட்டி கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு போன்றவை நிகழும். சக ஊழியரிடம் கொஞ்சம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று கோபமும் கொஞ்சம் தலை துக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சக பணியாளர்களிடம் ஆதரவாக நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் வந்து சேரும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக கூட இருக்கும். அது போல உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று காதலர்கள் எப்பொழுதும் போலவே கலகலப்பாக இருந்தாலும் சில பிரச்சனை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.