Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திறமை வெளிப்படும்…சிந்தனை மேலோங்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!     உங்கள் குடும்பத் தேவைகள் இன்று அதிகமாக இருக்கும். மற்றவரை நம்பி வாக்குகளை மட்டும் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிறைவேற்றுவது நல்லது கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதையும் சமாளிக்கும் திறமையும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள்.

புதிதாக வாகனம் வாங்கும் சிந்தனை உண்டாகும். காதலர்களுக்கு இனிமையாக தான் உள்ளது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |