Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டரை (2.46) லட்சத்தை நெருங்கியது…. சிகிச்சையில் 1.20 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 287 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 82,968 பேரும், தமிழகத்தில் 30,152 பேரும், டெல்லியில் 27,654 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து , குஜராத்தில் 19,592 பேரும், ராஜஸ்தானில் 10,331 பேரும், மத்திய பிரதேசத்தில் 8,996 பேரும், உத்தரபிரதேசத்தில் 9,733 பேரும், மேற்குவங்கத்தில் 7,738 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,929 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,969 பேரும், குஜராத்தில் 1,219 பேரும், மேற்குவங்கம் 383 பேரும், மத்திய பிரதேசத்தில் 399 பேரும், டெல்லியில் 761 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அதேபோல உத்திரபிரதேசத்தில் 257 பேரும், ராஜஸ்தானில் 231 பேரும், தேமிழகத்தில் 251 பேரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,293 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,20,406 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |