தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்நற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஒவ்வொரு ஓட்டல்களுக்கு வெளியே தெர்மல் ஸ்கேனிங் மேற்கொள்ளவேண்டும். கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். சோப்புகள் வைத்திருக்க வேண்டும். வயதானவர்கள் ஓட்டல்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை திறக்கப்படும் உணவகங்களில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தது. தற்போது உணவகங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது, வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்தே கட்டணங்கள் உயர்ந்தப்படுமா? , இல்லையா? என்பது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குளிர்சாதன வசதிகள் ஓட்டல்களில் பயன்படுத்தப்படாது. சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஓட்டல்கள் திறக்கப்படாது என்றும், பிற நாளை உணவகங்களை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.