Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கொரோனா” நேற்று மட்டும் 16 பேர் பாதிப்பு…. மாவட்ட நிர்வாகம் தகவல்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் படப்பை முருகதம்மன் பேட்டை அடுத்த அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் 35 வயதுடைய வாலிபர், மணிமங்கலம் பகுதியில் வசித்து வரும் 64 வயது வயதுடைய முதியவர், சோமங்கலம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் உட்பட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 309 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதம் 187 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |