Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“திடீர் விபத்து” டிப்பர் லாரியில் மோதிய இரண்டு சக்கர வாகனம்…. வாலிபர் மரணம்…!!

டிப்பர் லாரியில் இரண்டு சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்திருக்கும் பி.பள்ளியாடியை சேர்ந்தவர் இளவரசன் என்பவர்  நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இளவரசன் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடத்தூர் நோக்கி சென்ற பொழுது, பொம்மிடி மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத சமயத்தில் இலவரசனின் இரண்டு சக்கர வாகனம் மோதியது.

இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொம்மிடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |