தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 53.68% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 1,500 ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 0.849% ஆக உயர்ந்துள்ளது.