தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது .
மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை அடுத்து தற்பொழுது தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி தரப்பினரும் விரைவாக வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் .
இதனையடுத்து வேட்புமனுவைத் தாக்கல் செய்த கட்சிகள் தமிழகம் முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை அடுத்து திமுக அதிமுக ஆகிய இரண்டு தரப்பினரும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் .இந்நிலையில் தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஈடுபடுவதாக இருந்த பிரச்சாரம் ஒரு சிலகாரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கும் ,கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று அதிமுக வேட்பாளர் போட்டியிட உள்ள தென்சென்னை மக்களவைத் தொகுதியிலும் பாமக வேட்பாளர் போட்டியிடும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலும் முதலமைச்சர் காலை 8 மணியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக இருந்த நிலையில் காலை மேற்கொள்வதாக இருந்த பிரச்சாரம் மதியத்திற்கு பிறகு என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.