Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 128ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வால் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 52 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திராகாந்தி மருத்துவமனையில் ஒரு தளம் மட்டும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் மூலமாகவும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனால் எல்லையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் இன்று முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |