செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்தி மாவட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,944 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,854 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 785 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் கொரோனவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,053ல் இருந்து 1,143 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரக் காலமாக கொரோனா புதிய பாதிப்பு 1,000த்தை கடந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,500ககும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 31,667 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இங்கு நேற்று மட்டும் 135 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.