Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரை ஆபாசமாக பேசி கடிதம் அனுப்பிய மர்ம நபர்….காவல்துறை தீவிர விசாரணை !!…

ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ..

தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது .

தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால்  மிரட்டி  கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது  தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி  போலீசார் அவரை தேடி வருகின்றனர் . இது குறித்து முதற்கட்ட விசாரணையில் 21ஒன்றாம் தேதி ஒரு கடிதம் வந்திருக்கிறது . அந்த கடிதம் தகாத வார்த்தையில் குறிப்பிட்டு இருந்ததாகவும் மேலும் தொடர்ந்து ஆளுநர் மாளிகை மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களிலும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும்  அந்த கடிதத்தில் குறிப்பிடபட்டு

இருந்தது.

  இதனை அடுத்து ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும்  அலுவலர்கள் கிண்டி காவல் நிலையத்தில் புகார் எழுப்பியுள்ளனர் இதனை அடுத்து  அந்த கடிதத்தில் குறிப்பிட்ட பெயரான சரவணன் பிரதாப் என்பவர் மீது முதல் கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கடிதமானது முகவரி குறிப்பிடபடாமல்  இருந்தது  ,மேலும் தபால் போஸ்ட் மூலம் வந்துள்ளதால் எங்கிருந்து வந்துள்ளது என்று விசாரணை நடைபெற்று வருகிறது எந்த காரணத்திற்காக மிரட்டல் விடுக்கப் பட்டது என்பது குறிப்பிடப்பட வில்லை மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியான  கடிதங்கள் எழுத அதிகம்  வாய்ப்புள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

Categories

Tech |