சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. டிபிஐயில் தேர்வுகள் இயக்கக உதவியாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வுத்துறை அதிகாரிகளுக்கே கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது.