விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று (ஜூன் 7 ) மாலை சிகிச்சைப் பலனளிக்காமல் அந்த பெண் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது. எனவே அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.