சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பாதித்த 2 பேருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.