Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையில் இருந்து வந்த 6 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமையில் நேற்று வரை 492 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 240 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் 2 பேர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 250-ல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று மாலை சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையில் தெரியவரும்.

Categories

Tech |