செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவல் பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் அதில் மண்டலவாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ” படுக்கைகள் நிரம்பிவிட்டதாக செய்திவாசிப்பாளர் வரதராஜன் வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டுள்ளார் என அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது பெருந்தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவும் காலத்தில் பொறுப்பு இல்லாத வகையில் செய்தி வாசிப்பாளர் செயல்பட்டுள்ளார். செய்திவாசிப்பாளர் எந்த அரசு செயலாளரை தொடர்பு கொண்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அவர் எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.