Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை விதிக்கக்கூடாது: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்!!

வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்தலாமா? எனபது குறித்து அரசு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார். எனவே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை விதிக்க கூடாது என நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கு விவரம்:

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? கேள்வி எழுப்பினர். மேலும் தேர்வினை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கலாமே? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறீர்கள்? எப்படி தேர்வினை நடத்த போகிறீர்கள்? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.

மாணவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஏற்கனவே 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து விட்டதாகவும், ஓரிரு தேர்வுகள் மட்டுமே தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்வுகளை நடத்த தயாராக உள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை எனவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைப்பது குறித்து அரசே முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வேலைக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மத்திய அரசு தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால், தமிழகத்தில் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மேலும் முக்கியமான தேர்வு என்பதால், 11 மாநிலங்கள் பொதுத்தேர்வை நடத்தி முடிந்துவிட்டன. தமிழகத்தில் பொதுத்தேர்வினை தள்ளிவைத்தால் அது பேராபத்தாக அமையும் என வாதிட்டு வருகிறார்.

Categories

Tech |