Categories
கிரிக்கெட்

அப்பவே கேலி செய்தார்கள்…இப்போதுதான் எனக்கு புரிந்தது- கடுப்பான ஆல் ரவுண்டர்

ஐ.பி.எல் தொடரில் இழிவான சொற்களால் நான் இனவெறி தாக்குதலை எதிர் கொண்டேன் என மேற்கிந்திய கிரிக்கெட் வீரரின் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டின் பெரும் அளவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இனவெறிக்கு எதிராக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மேற்கு இந்திய வீரரான டேரன் ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இது அமெரிக்காவில் மட்டும் அல்ல, தினசரி நடக்கும் பிரச்சனையாகும். சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால், அவர்களுக்கு நாமே ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இதுபோன்ற இனவெறி தாக்குதலை நானும் எதிர்கொண்டேன் என அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினேன். அப்போது என்னையும் இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்று அழைப்பார்கள். அந்த வார்த்தைக்கு கருப்பு நிறத்தில்  வலுவான மனிதன் என்பது அர்த்தம் என நினைத்திருந்தேன். ஆனால் அது கருப்பு நிறத்தை கேலி செய்ய கூறப்படும் சொல் என்று அறிந்ததும் இப்பொழுது கோபம் தான் வருகிறது, என்று டேரன் ஷமி தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் தன்னை ‘கலு’ என்று கிண்டல் செய்தவர்கள் சக வீரர்களா  அல்லது ரசிகர்களா மேலும் அது எப்போது நடந்தது என்ற விவரங்கள் எதையும் பதிவு செய்யவில்லை. இந்தியாவின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரில் இதுபோன்ற இனவெறி தாக்குதல் தொடர்பான புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |