Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு… தமிழக அரசு கூடுதல் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!

10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைகோரிய வழக்கு வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுதேர்வை மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அப்போது சமரியான கேள்விகளை கேட்ட நீதிபதிகள், ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா? என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலைக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மத்திய அரசு தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால், தமிழகத்தில் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மேலும் முக்கியமான தேர்வு என்பதால், 11 மாநிலங்கள் பொதுத்தேர்வை நடத்தி முடிந்துவிட்டன. தமிழகத்தில் பொதுத்தேர்வினை தள்ளிவைத்தால் அது பேராபத்தாக அமையும் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், மாணவர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தேர்வு நடத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். இதையடுத்து, தேர்வு தொடர்பாக கூடுதலான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து. ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்ந்தது விசாரிக்க முடிவெடுத்துள்ளது.

Categories

Tech |