Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்காரணமாக நேற்றுவரை மொத்தம் 1,329 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் இதுவரை 682 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது நேற்று வரை 635 சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 703 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |