Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் டிஸ்சார்ஜ்..!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களை மருத்துவக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து தினமும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 பேரில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது 39 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை சேலம் அரசு தலைமை மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தனர்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அனைவருக்கும் மருந்து, முகக்கவசங்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களது வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 147 பேர் ஏற்கனவே குணமடைந்த நிலையில், இன்று மேலும் 47 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |