கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு மொத்த பூட்டுதலை அதாவது முழு ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டதறியப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் 21 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். இதன் காரணமாகவே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடகிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் காலத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோரமிட் -19 பரவலின் தற்போதைய நிலைமை மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க அமைச்சர்கள், சுகாதார அதிகாரிகள், தேவாலயங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் சோரம்தங்கா ஒரு சந்திப்பை நடத்தினார். அந்த கூட்டத்தில் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.