டெல்லியில் கூட்டணி தொடர்பாக பேசிவந்த பொழுது ராகுல் காந்தியின் மாற்று கருத்துகளுக்கு எதிர் கருத்துக்கள் எழுந்ததால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது ..
மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தலுக்கான கூட்டணிகள் பிரச்சார இயக்கங்கள் என தேர்தல் கொண்டாட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றனர்
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆனது காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளை பல வாரங்களாக மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் முதற்கட்டமாக காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை நிராகரித்தது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் தனித்து போட்டியிடுவதாக கூறியிருந்தார்
இதனையடுத்து தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசில் கூட்டணிக்கான வாய்ப்புகள் என்பது ஏற்படுத்தப்பட்டு உள்ளது இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேரும் விவகாரத்தில் காங்கிரஸில் இழுபறி நீடித்து வருகிறது டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை பங்கிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்
அப்போது ஆம் ஆத்மி உடன் கூட்டணி சேர முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் உள்ளிட்ட ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது ஆனால் ஆம் ஆத்மி நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று ராகுல் கருத்து கூறியுள்ளார் ஆனால் இரு வேறு கருத்துக்களும் எதிர்மறையாக இருப்பதால் குழப்பம் நீடித்து வருகிறது .