ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாளாக இருக்கும். வரவு போதுமானதாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது ரொம்ப நல்லது. நிதானத்தை கடைபிடியுங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல் கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாகவே நடக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கரும்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை மற்றும் வெள்ளை நிறம்.