விருச்சிக ராசி அன்பர்களே…! வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள் ஆகயிருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானமும் நல்ல திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீக்கி விருத்தியடையும். வேலை பார்க்கும் இடத்தில் அன்புடன் பழகுவது நல்லது.
உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும்.வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் ஏற்படும். அதனால் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். காதல்கள் எப்போதும் போலவே சந்தோஷமாக காணப்பட்டாலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.
அதாவது பிறர்க்கு உதவி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள்.மு க்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.