Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 ஏரிகளில் 1.59 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி… பூமிபூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்…!!

மூன்று ஏரிகளில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் இருக்கும் தூள்செட்டி ஏரி, பிக்கனஅள்ளி ஏரி மற்றும் ராஜபாளையம் புதிய ஏரி என 3 ஏரிகளில் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரும் பணி, பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகள் போன்றவை 1.59 கோடி செலவில் மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிக்கான பூமிபூஜை விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமை தாங்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலி கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க நடைபெற்றது.

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று ஏரிகளில் தூர்வாரும் பணியை பூமி பூஜையை முடித்து தொடங்கிவைத்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, கௌரி, மீனா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சேட்டுபிரபாகர், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், பாலக்கோடு தாசில்தார் ராஜா என பலர் பங்கேற்றனர். அமைச்சர் கேபி அன்பழகன் விழாவில் பேசியதாவது, “பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 71 ஏரிகள் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் அடிப்படையில் தூர்வார பட்டுள்ளன.

2020-2021 ஆம் ஆண்டில் புதிதாக 11 ஏரிகள் தூர் வார 8,11,00,084 நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2019-2020 ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் 16,46,00,000 லட்சம் ரூபாய் மதிப்பில் 458 ஏரிகள் தூர் வார பட்டன. இவ்வாறு அமல்படுத்தப்படும் திட்டங்களால், ஏரிகளில் அதிகளவு மழை நீரை தேக்கி வைத்து, சுற்றியிருக்கும் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Categories

Tech |