காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று ராகுல்காந்தி பிரச்சார மேடையில் உறுதி அளித்துள்ளார் .
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் தங்களுக்கான வேட்பு மனுவை தொடர்ந்து அளித்து வருகின்றனர் இந்நிலையில் வேட்பு மனு அளித்த நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான பிரச்சார பயணம் என்பது நாள்தோறும் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சுரதத்கார் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார் இந்நிலையில் பிரச்சார மேடையில் அவர் இவ்வாறு கூறினார் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஈடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது இந்தியாவில் வறுமை எண்ணிக்கையானது குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் மேலும் இந்திய நாட்டில் ஒரு ஏழை மனிதன் கூட இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் வேலைவாய்ப்பின்மை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்னும் நாட்டில் 25 கோடி ஏழை மக்கள் இருப்பது கேடானது என்றும் அவர் விமர்சித்தார்
மேலும் விவசாய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என்றும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார்