Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

இருப்பினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறிய அவர், ஆனாலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திருவிக மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 7 லட்சத்து 77திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக குடிசை பகுதிகளில் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மேலும் 2,585 தெருக்கள் உள்ளன. தெருவாரியாக மக்களை அடையாளம் கண்டு 100% விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவச அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் கொடுப்பது, சத்துமாத்திரைகளை கொடுப்பது போன்ற வழிமுறைகளை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வைப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன” என தெரிவித்தார்.

Categories

Tech |