அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் பஞ்சபடியை உடனடியாக வழங்க வேண்டும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் கொடுக்க வேண்டும்,
அரசு பணியாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அமைக்கக் கூடாது என பல கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கத்தின் சார்பாகவும் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பழனி கிளை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்க துணைத் தலைவரான நாசர்தீன் முன்னிலை வகித்தார். 10 பேர் பங்கேற்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ரயில்வேயை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்சியையும் ,ஆட்குறைப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.