10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தலாமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 11ம் தேதி ஒத்திவைத்துள்ளனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த வருகிறார். தேர்வை தள்ளி வைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.