Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்… ஐகோர்ட்டில் மனுதாக்கல்!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்கள் பலர் முயற்சிக்கும் போது, பல ஆபாச விளம்பரங்கள் மற்றும் இணையதளங்கள் அவர்களின் கவனத்தை திசை திரும்புவதாக இருப்பதாகவும், இதனால் தேவையற்ற கவனச்சிதறல் மாணவர்களுக்கு உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 8% வீடுகளில் மட்டுமே இணையதள வசதிகள் மற்றும் கணினி வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்துவதால் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலையில் உருவாக்க இது வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சவால்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |