நாடு முழுவதும் கொரோனோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதுவம் உணவகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தளங்கள், அலுவலங்கள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
- எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும்.
- லேசான காய்ச்சல், சளி இருந்தாலே அலுலகத்திற்கு வர கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- கட்டுப்படுத்த பகுதியில் இருந்து அலுவகம் வரக்கூடாது
- 20 ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் மற்றவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஊழியர்கள் 30 நிமிடத்திற்கு ஒரு முறை கைகளை கழுவ வேண்டும்
- ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்
- பணிபுரியும் இடங்களை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- கதவுகள், கைப்பிடிகள், கழிவறைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது
- அலுவலகங்களில் ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.