Categories
தேசிய செய்திகள்

Breaking : புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு!

புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றனர். நேற்று மாலை தெலுங்கானாவில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியை பொறுத்தவை தனியாக பாடத்திட்டம் இல்லை, தமிழக அரசின் பாடத்திட்டத்தையே பின்பற்றி வருகின்றனர்.

எனவே தமிழக முடியையே பின்பற்றி வரும் நிலையில் புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை புதுச்சேரியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 128 ஆகும். 53 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள் நிலையில் தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |